web log free
May 02, 2024

ரணிலுடன் நேருக்கு நேர் பேச்சை நிராகரித்தார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில், ஞாயிறுக்கிழமை இடம்பெறவிருந்த  பேச்சுவார்த்தை நடைபெறாது என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விருவருக்கும் இடையில், நேருக்கு நேர் பேச்சு நடத்துவதற்கே, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டு திகதியும் குறிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தையில் தன்னால் பங்குபற்ற முடியாது என்று, வேறு கடமைகள் இருப்பதாக சஜித் பிரேமதாஸா கூறிவிட்டார் என அறியமுடிகின்றது. 

ஞாயிறுக்கிழமை பேச்சுவார்த்தையில் சஜித் பிரேமதாஸா பங்கேற்க மாட்டார் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

 

ஆகையால் அந்த பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை  வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 தன்னுடைய பிரிவினர் முன்வைத்த கால்களை,எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வைக்கமாட்டார் என சஜித் பிரேமதாஸா தெரிவித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

Last modified on Saturday, 07 September 2019 17:36