ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அடுத்தக் கட்ட நகர்வினால், ஜனாதிபதித் தேர்தல், 2020 மே மாதம் வரையிலும் ஒத்திபோவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய பதவிக்காலம் எப்போது நிறைவடையவிருக்கிறது என, உயர்நீதிமன்றத்திடம் விளக்கமொன்றை கோரவிருக்கின்றனார். அதற்கான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ள என அறியமுடிகின்றது. அந்த ஆவணத்தை இரண்டொரு நாட்களில் அனுப்பிவைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட தான், தன்னுடைய பதவிக்காலம் 19ஆவது திருத்தம் கைச்சாத்திடப்பட்ட 2015 மே மாதம் 15ஆம் திகதியே ஆரம்பமாகவுள்ளது.
உயர்நீதிமன்றத்தினால் அந்தத் தர்க்கம் ஏற்றுக்கொள்ளப்படுமாயின், ஜனாதிபதித் தேர்தலுக்கான அழைப்பு, 2020 மே மாதமே விடுக்கப்படும். எவ்வாறாயினும், எதிர்க்கட்சியின் தர்க்கத்தின் பிரகாரம், சபாநாயகர் 19ஆவது திருத்தத்தில் கைச்சாத்திட்டது.
இன்றைய தினத்தில் என்றார், ஜனாதிபதி தனது பதவிக்காலம் இன்றிலிருந்து 05 வருடங்களில் நிறைவடையும். அப்படியாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம், 9 வருடங்கள் இருக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் தங்களுடைய வாதங்களை முன்வைக்கின்றனர்.