web log free
June 20, 2026

ஆனையிறவில் சோதனை தளர்வு

ஆனையிறவு சோதனைச் சாவடி தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் சோதனைச் சாவடிகள், காவலரண்கள் அமைக்கப்பட்டன.

தற்போது, நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து சோதனைச் சாவடிகளில் பெரும்பாலானவை அகற்றப்பட்டன.

ஆனையிறவு பகுதியில் மாத்திரம் சோதனை சாவடி நீக்கப்படவில்லை. அதற்கு, தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையிலேயே ஆனையிறவு சோதனைச்சாவடி நேற்று (07) நள்ளிரவு முதல் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd