முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, புதிய கூட்டணியொன்றை அமைத்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தயாராகி வருகின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணியை அமைக்காது, புதிய கூட்டணியொன்றை அமைத்தே, களத்தில் ஒருவரை இறக்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றார் என அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி, தற்போது மிகுதியாகவிருக்கும் உறுப்பினர்கள், ஜே.வி.பியின் எதிர்பாளர்கள், ஜாதிக ஹெல உறுமய மட்டுமன்றி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்தே புதிய கூட்டணியை அமைப்பதற்கு சந்திரிகா நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார் என அறியமுடிகின்றது. சந்திரிகா அமையாரின் கோரிக்கைக்கு சிவில் அமைப்புகள் பல, ஒத்துழைப்பு நல்கியுள்ளன என அறியமுடிகின்றது.