web log free
April 06, 2026

ரணில்-கரு-சஜித் இன்றிரவு சந்திப்பர்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகிய மூவருக்கும் இடையில் இன்றுமாலை சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

அலரிமாளிகையில், இன்றுமாலை 6 மணிக்கு மூடிய அறைக்குள் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு மிக தீர்க்கமானதாக இருக்கும் என அறியமுடிகின்றது. 

மூடிய அறைக்குள் நடைபெறும் இந்த சந்திப்பிலேயே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 

அதுமட்டுமன்றி, எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படும் என அலரிமாளிக்கை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Last modified on Tuesday, 10 September 2019 16:36
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd