ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும்.
இந்த சந்திப்பை கடந்த ஞாயிற்றுகிழமை நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அது பிற்போடப்பட்டது.
இதேவேளை, சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதநிதிகளுக்கும் இடையில் நேற்று (09) யாழில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பிரதநிதிகள் இதில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இதில் எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்தன், ஈ. சரவணபவன் மற்றும் யாழ். மாநகர மேயர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று நடைபெறும் பேச்சுவார்தையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
இந்த நிலையில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல் போனால் பிரதித் தலைவருக்கு போட்டியிட கட்சியின் யாப்பிற்கமைய சந்தர்ப்பம் உள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்தும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று (10) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது