சொத்துக்கள் தொடர்பிலான விவரங்களை கையளிக்காத அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எட்டுப் பேரக்கு எதிராக, டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம், இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, நவீன் திஸநாயக்க, ஹரின் பெர்ணான்டோ, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக்க, மனோ கணேசன் மற்றும் எம்.எச்.எம் ஹலீம் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2019 ஓகஸ்ட் 20ஆம் திகதிக்குள் 2018/2019 ஆம் ஆண்டுகளுக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் அறிவிக்கவேண்டும்.
எனினும், சொத்துக்கள், பொறுப்புக்கள் சட்டத்தின் கீழ் 4 (ஏ) ii பிரிவின் பிரகாரம் அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சர்களும், சொத்துக்கள், பொறுப்புகள் தொடர்பிலான விவரங்களை, ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.
டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம், 2019ஆம்ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியன்று தாக்கல் செய்திருந்த தகவலறியும் விண்ணப்பத்துக்கு கிடைத்த பதில்களின் பிரகாரம், 2019 ஓகஸ்ட் 20ஆம் திகதி வரையிலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள எட்டு அமைச்சர்கள், தங்களுடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் விவரங்களை சமர்பிக்கவில்லை என்பது தெரியவந்தது.