web log free
April 06, 2026

சடலத்தை புதைத்த பிரதியமைச்சருக்கு கம்பி

மத்துகம பகுதியிலுள்ள தோட்டமொன்றில் மரணமடைந்த தொழிலாளி ஒருவரின் சடலத்தை நல்லடக்கம் செய்த, அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும, எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் அவர், இன்று (10) ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி, சடலத்தை புதைத்தார் என்றே, அவர் மீதும், மேலும் ஐவருக்கு எதிராகவும் மத்துகம பொலிஸாரினால், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறு குற்றச்சாட்டப்பட்ட பிரதியமைச்சர் பாலித்த தெவரபெரும உள்ளிட்ட ஐவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Last modified on Tuesday, 10 September 2019 16:19
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd