பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜித்துக்கும் அவர்களுடன் இணைந்த அமைச்சர்களுக்கும் இடையில் 10ஆம் திகதி இரவு 10 மணியிலிருந்து 12 மணிவரையிலும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.
அந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படும் என அறியமுடிகின்றது.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்துரைத்திருந்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, “பிரதமருடனான பேச்சில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில், ஒது நேர்மையான விளைவு கிட்டியது” என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் முன்னோக்கிச் செல்வதே தன்னுடைய நோக்கமாகும் என்றும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
“கலந்துரையாடப்பட்ட சகல விடயங்களையும் கூறமுடியாது. ஏனெனில், எதிர் தரப்பினர் அவற்றை தங்களுடைய தேவைக்கு ஏற்ப, குழப்பும் வகையில், பயன்படுத்திக் கொள்வர்” என்றார்.
“நான், பிணந்தின்னி கழுகிலிருந்து பருந்தாகவில்லை. நான் சோகமான ஒரு யானையாகும்” என்றார்
பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் நல்லபெறுபேறு, இன்னும் சில நாட்களுக்குள் தெரியும் என்றும் அமைச்சர் பிரேமதாஸ இதன்போது தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கொள்வதற்கான தேர்தல் உபாயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணி அமைப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படது என்றும் தெரிவித்தார்.
பிரதமர் தலைமையிலான கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடுத்தக் கட்டமாகவே, இந்தப் புச்சுவார்த்தை இடம்பெற்றது.
ஆரம்பத்தில் ”ரணில்-சஜித்” சந்திப்பு, கடந்த 8 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
எனினும், 10 ஆம் திகதி 10 மணிக்கே ஆரம்பமாகி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைந்தது.