web log free
November 27, 2024

கரு குதித்தால் கோத்தா அவுட்டாம்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், சபாநாயகர் கரு ஜயசூரிய போட்டியிட்டால், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தோல்வியடைவார் என ஆய்வொன்றிலிருந்து தெரியவருகின்றது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்தே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை அறிவியல் ஆய்வாளரும் அந்தப் பிரிவின் முன்னாள் பேராசிரியருமான சிசிர பின்னவல தெரிவித்துள்ளார். 

 

கோத்தாவுடன் சஜித் போட்டியிட்டால், சஜித்துக்கு மூன்றாவது இடமே கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை எட்டு வலயங்களாக பிரித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கோத்தாவுடன் சமாந்தரமாக பார்த்தால், அதில் ஏழு வலயங்களில் கருவும், நான்கு வலயங்களில் சஜித்தும்  முன்னிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வலயங்கள்

1.கொழும்பு மாநகர அதிகார பிரதேசம்.

2. ஹோமாகம, பன்னிப்பிட்டிய, மஹரகம, கோட்டை உள்ளிட்ட தொழில் பிரதேசம் 

3.கண்டி, காலி, மாத்தறை, குருநாகல் உள்ளிட்ட இடைக்கால நாகரீக அதிகார பிரதேசம் 

4.தெற்கு, வடமேல், வடமத்திய மற்றும் கம்பஹா உள்ளிட்ட கிராமிய பௌத்த பிரிவு

5.மொனராகலை, ஹம்பாந்தோட்டை, வடமேல் மாகாணம் உள்ளிட்ட பொருளாதார ரீதியில் பின்னடைந்த வலயம்.

6.வடக்கு, கிழக்கு தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசம். 

7. கிழக்கில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் பிரதேசம்

8. நாட்டுக்குள் பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள் வாழும் பிரதேசம், கரையோர பிரதேசம் 

என்றடிப்படையில் பிரித்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:05
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd