தாமரை மொட்டை (மொட்டு) சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உட்கட்சி மோதல்கள் இல்லை என்றாலும், மொட்டு சின்னத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள என அறியமுடிகின்றது.
மொட்டு சின்னத்தை கைவிட்டு, பொதுச் சின்னத்தில் களத்தில் குதித்தால், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபஷவுக்கு ஆதரவளிக்க தயார் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
எனினும், மொட்டு சின்னத்தை கைவிட போவதில்லை என கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதியக் கூட்டணியை அமைக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் விளைவிக்கப்படமாட்டாது என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனினும், சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் கோத்தாவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், மொட்டு சின்னத்தை கைவிடமாட்டேன் என ஒற்றைக்காலில் நிற்கிறாராம் கோத்தாபய ராஜபக்ஷ