ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நிறைவுக்கு வராதநிலையில் உள்ளது.
இந்நிலையில், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரமுனவுடன் இணைவதே ஒரே வழியென பெரமுனவினரும், சுதந்திரக் கட்சியிலிருந்து பெரமுனவுக்குச் சென்றவர்களும் வலியுறுத்துகின்றனர்.
எனினும், கையை சின்னமாகக் கொண்ட சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், மொட்டுடன் இணையாவிடின், வேறு வழியே அவர்களுக்கு இல்லையென, ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமசந்திர தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியின் எம்.பிக்களை கூட்டி, கழித்து சமன்பாடொன்றை தயாரித்துள்ளார்.
அதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்டதன் பின்னர், தற்போது சுதந்திரக் கட்சியில் இருக்கும் 14 எம்.பிகளின் எண்ணிக்கை அரைக்கு அரைவாசியாகும் என ஆருடம் கூறியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தற்போதைய அதிகாரிகளினால் எடுக்கப்படும் தீர்மானமே, இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக “கயிறு சாப்பிடாது” “ஒரு காலில்” நிற்குமாறும் அவர் சுதந்திரக் கட்சியினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.