ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை இவ்வார இறுதிக்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாற இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இவ்வாறு காலக்கெடுவை இவ்விரு கட்சிகளும் விதித்துள்ளன.
புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பில், இரு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதில் சில விடயங்களுக்கு இரு கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
தாமரை சின்னத்தில் இல்லாமல், பொது சின்னத்தில் போட்டியிட வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வலியுறுத்தியிருந்தது.
எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையிலேயே, இந்த அறிவிப்பு விடப்படவுள்ளது.