ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமானன மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனார்.
இரு கட்சிகளும் இணைந்து அனுப்பிய கடிதத்துக்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதில் எதுவும் அனுப்பிவைக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலை மிக அண்மித்த நாளொன்றில் நடத்துவதற்கான திகதியை குறிக்குமாறே, அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை நடத்தக் கூடிய மிக அண்மித்த நாள், நவம்பர் 9 ஆம் திகதியாகும் என்றும், ஆகக் கூடிய நாள், டிசம்பர் 7ஆம் திகதியாகும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதற்கு முன்னர் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.