web log free
March 03, 2026

இரகசியமான தீர்மானத்துக்கு இடமளியேன்



பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகிய இருவரும் இணைந்து, புதிய அரசியமைப்பு அல்லது அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக கொண்டுவரப்படும் எந்தவொரு இரகசியமான தீர்மானத்துக்கும் தான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


புதிய அரசமைப்பு என்கின்றனர், திருத்தம் என்கின்றனர், வரைபு என்கின்றனர். அவ்வாறு ஒன்றுமே இல்லையென்கின்றனர். இதில் எது உண்மையென்பது ரணிலுக்கும் சுமந்திரனுக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd