இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தி.மு.க துணைத் தலைவியும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று (13) இடம்பெற்றது.
சந்திப்பில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், முன்னாள் பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினர்ருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பலாலி பிராந்திய விமான நிலையம் மற்றும் இந்தியாவின் முக்கிய 4 நகரங்களுக்கிடையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நேரடி விமான சேவை மற்றும் இதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த பிரதமர் இதன் போது தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கலந்து கொண்டார்