web log free
February 05, 2026

அநுரவுக்கு கரு கோலுக்கு மேல் கோல்

ஜே.வி.பியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவுக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய பல முறை, தொலைபேசியின் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி, கலந்துரையாடியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவர் கலந்துரையாடியுள்ளார் என அறியமுடிகின்றது.

எனினும், தன்னுடைய  நிலைப்பாட்டிலிருந்து அநுரகுமார திஸாநாயக்க ஒரு அடிக்கூட பின்வாங்கவில்லை என அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை களமிறங்கினால், போட்டியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கரு ஜயசூரிய கேட்டிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அந்த தொலைபேசி உரையாடலில் எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டன என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. 

Last modified on Saturday, 14 September 2019 06:06
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd