ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சியில் களையெடுக்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என அறியமுடிகின்றது.
கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் , அப்பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது.
அப்பதவிக்கு, அமைச்சர் தயா கமகே நியமிக்கப்படவுள்ளார்.
இந்நிலையில், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியில் வகிக்கும் முக்கிய பதவிகளிலிருந்து நீக்கப்படவுள்ளன என தெரியவருகின்றது.
கட்சியின் ஒழுக்காற்று குழுவினால் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், கட்சியின் முக்கியஸ்தர்களான சுஜீவ சேனசிங்க, அஜித் பி.பெரேரா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காறு நடவடிக்கை முன்னெடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.