கடும் கோபமடைந்த முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, குழப்பமடைந்து முரண்பாடுகளை தோற்றுவித்துக்கொள்ள வேண்டாமென்று அறிவுரை வழங்கியதுடன், ராஷபக்ஷர்களுக்கு கோல் எடுத்து, அறிவுரை வழங்கியுள்ளார் என அறியமுடிகின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தே மேற்கண்டாவறு அறிவுறுத்தியுள்ளார்.
தாமரைக் கோபுர திறப்புவிழாவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையினால், ராஷபக்ஷர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணியை அமைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
அதுதொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தாமரைக் கோபுரத்தை நிர்மாணிக்கும் ஆரம்பக்கட்ட பணிகளுக்காக சீன நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினால், அந்த நிறுவனம் மாயமாகிவிட்டது.
அந்த நிறுவனம், 240 கோடி ரூபாயை சுருட்டிக்கொண்டு மாயமாகிவிட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய உரையில் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டால், இன்னும் பல விடயங்களை அம்பலப்படுத்திவிடக் கூடும் ஆகையால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய கூட்டணியை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அறிவுறுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.
கோபத்துடன் செயற்படாமல் அறிவை பயன்படுத்துமாறும் மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார்.