web log free
May 09, 2025

ரணிலுக்கு சஜித் இடி- சஜித் கூறியவை ஒரே பார்வையில்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாரென நான் கடிதம் ஒன்றை கட்சித் தலைவருக்கு அனுப்பினேன். எமது கட்சி ஜனநாயக கட்சி. குடும்ப அல்லது சமூக உறவுகளை வைத்து நாம் தீர்மானம் எடுக்க மாட்டோம். பாராளுமன்ற மற்றும் நிறைவேற்றுக்குழு நான் தேர்தலில் போட்டியிடுவதை விரைவில் முடிவு செய்ய வேண்டும்  என அமைச்சர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார். 

அமைச்சர் மங்களவின் இல்லத்தில் தற்போது நடந்துவரும் செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

சஜித் கூறியவை, ஒரே பார்வையில்...

கட்சிக்குள் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கட்சியின் கூட்டங்களை உடனடியாக கூட்டி முடிவை எடுக்கவேண்டும்.

கட்சிக்குள் உள்ளும் வெளியிலும் பிரச்சினைகள் உள்ளன.

கற்றறிந்து கொண்டு முன்னகர வேண்டும்.

எனக்கு ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் கிடைக்கும் என நம்புகின்றேன்.

சமாதானமாக ஐக்கியமான இலங்கையில் சகலரும் வாழவேண்டும்.

கட்சி, முன்னணி என்றகையில் எல்பிட்டிய தேர்தலை வெற்றிக்கொள்ளலாம்.

அது அரசியல் வெற்றியாக செய்யலாம்.

எனது அரசியல் வாழ்க்கையில் எந்தவித நிபந்தனையில் அடிபணியமாட்டேன்.

நிபந்தனையின் கீழ் தீர்மானம் எடுக்கமாட்டேன்.

மனிதாபிமான அடிப்படையில் தீர்மானமொன்றை எடுப்பேன்.

என்னை போட்டியிடுமாறு அவர்கள் அழைப்பதால் நான் வந்துள்ளேன்.

நிறைய வேட்பாளர்கள் கட்சிக்குள் இருப்பார்களானால் தேவைப்படின் இரகசிய வாக்கெடுப்பை நடத்தி தீர்மானிக்கலாம்.

இது பிரதமருக்கான தேர்தல் அல்ல. ஜனாதிபதித் தேர்தல் என்பதை பிரதமர் நினைவில் கொள்ளவேண்டும்.

நான் வேட்பாளராக நியமிக்கப்படுவேன் என்று நான் நம்புகிறேன்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்பட வேண்டுமென பேசப்படுகிறது. மக்கள் விருப்பே என் விருப்பு.

ஜனநாயக ரீதியில் எதனையும் செய்ய முயல்வதே எனது நோக்கு.

நாம் அனைத்து கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.. 

 

Last modified on Thursday, 19 September 2019 01:49
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd