web log free
November 27, 2024

“பாய்ந்து சாவதற்கு தாமரைக்கோபுரம் சிறந்தது”

தெற்காசியாவிலேயே மிகவும் உயரமான தாமரைக் கோபுரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செப்டெம்பர் 16ஆம் திகதி திறந்துவைத்தார். 

அந்த கோபுரத்தை நிர்மாணத்தில் மறைந்திருக்கும் சுவிஷேஷமான விடயங்கள் சிலவும் உள்ளன. 

1. அந்தக் கோபுரத்தின் நிர்மாணப்பணிகள், 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

2. சீன நிறுவனம் இலங்கை பொறியியலாளர்களுடன் இணைந்து பணிகளை முன்னெடுத்தது.

3. நிர்மாணப்பணிகளுக்கு, 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவானது.

4. பிரதானமாக ரூபவாஹினி மற்றும் ஒலிபரப்பு பரிமாற்றம் உள்ளிட்டவைக்கு கோபுரம் பயன்படுத்தப்படும். 

5. அதுமட்டுமன்றி உற்சவ மண்டபகங்கள், உணவகங்கள், அருங்காட்சியகங்களும் உள்ளன. 

6. தாமரைக் கோபுரம் நிர்மாணப்பணிகளின் போது, பல்வேறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

7. இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவே இந்தத் திட்டத்தை 2008 ஆம் ஆண்டு முன்வைத்தது. 

8. அதற்கான இடம், பேலியகொடையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன எனினும், காணியில் பிரச்சினைகள் ஏற்பட்டன. 

9. அதற்குப் பின்னர், தற்போது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கொழும்பு டீ.ஆர விஜயவர்தன மாவத்தையில், அரச காணி 2010ஆம் ஆண்டு பெற்றுக்கொள்ளப்பட்டது. 

10. ஆறு ஏக்கர் நிலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அங்கிருந்த மாடிக்கட்டிடம், மாடி வீடுகளில் வாழ்ந்தவர்களுக்கு வேறு இடங்கள் கொடுக்கப்பட்டன.

11. அதன் பின்னர், 2012 ஆம் ஆண்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

12. சீன நிறுவனங்கள் இணைந்துகொண்டன, சீனாவும் கடன் வழங்கியது. 

13. மொத்த செலவில் 80 சதவீதத்தை சீன நிறுவனங்கள் இரண்டும், ஏனைய 20 சதவீதத்தை இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவும் செலவிடுவதற்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 

14. தாமரைக் கோபுரத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தின் ஊடாக 40 வருடங்களில் கடன் திருப்பிச் செலுத்தப்படும். வட்டியுடன் செலுத்தப்படும் 

15. நிர்மாணப்பணிகள் 912 நாட்களில் நிறைவுக்கு கொடுவரும் வகையில் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

16.எனினும், வேலை ஆரம்பிக்கப்பட்டு நிறைவுக்கு கொண்டுவருவதற்கு 7 ஆண்டுகள் நிறைவடைந்தன. 

17. இந்த தாமரைக் கோபுரத்தை சீனா நிர்மாணித்தமையால், இந்தியா கடுமையாக சந்தேகம் கொண்டது. 

18. இந்தக் கோபுரம் சீனாவுடைய அல்ல, இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவுக்குரியது என பதிலளிக்கப்பட்டதன் பின்னர், இந்திய ஊடகங்கள் விமர்சனங்களை நிறுத்தின.

19. தெற்காசியாவிலேயே உயரமான கோபுரம் என்றப் பெயரை, 356 மீற்றர் உயரத்தை கொண்ட தாமரைக் கோபுரம் 2021ஆம் ஆண்டு மட்டுமே கொண்டிருக்கும். 

20. அதற்குப் பின்னர் கொழும்பு-01 இல் நிர்மாணிக்கப்படும் “வன்டவர்” தெற்காசியாவிலேயே உயரமான கோபுரமாகும். அதன் உயரம் 376 மீற்றராகும். 

21.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது பல்வேறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

22. “பாய்ந்து சாவதற்கு, அந்த தாமரைக்கோபுரம் சிறந்தது” என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்திருந்தார். 

23. தாமரைக் கோபுரம்,  இலஞ்ச கோபுரம்” என மங்கள சமரவீர அன்று குற்றஞ்சாட்டியிருந்தார். “தாமரைக் கோபுரம், இலஞ்சத்தின் குறியீடு” என்றும் தெரிவித்திருந்தார்

24. அந்தக் குற்றச்சாட்டுகளை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நிராகரித்திருந்தது. 

25. பொம்பே வெங்காயத்தை உரித்து போடத்து போல, தாமரைக் கோபுரத்துக்கு அருகில் செல்லும் போது தென்படும் என, தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்திருந்தமை பெரும், விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது. 

26. இலங்கை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் 80 பேரின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் கண்காணிக்கப்பட்டன. 

27. காற்றுக்கு இந்த கோபுரம் மூடப்படும் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதனையும் பேராசிரியர்கள் நிராகரித்தினர். 

29. இந்த கோபுரம் திறந்து வைக்கப்பட்டு சீன நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டது.

30. நிர்மாணப்பணிகள் நிறைவடையாமையால், பொது மக்களால் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கு காலமெடுக்கும். 

 

 

 

 

 

 

Last modified on Tuesday, 17 September 2019 04:12
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd