web log free
June 20, 2026

வேட்பாளர் விவகாரம் அறிக்கை விட்டார் அகில

“ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பாரிய கூட்டணி அமைத்து ஐக்கிய தேசியக் கட்சி முகங்கொடுக்கும்”. என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும், அதன் கூட்டணிக்குள்ளும் முரண்பாடுகள் உள்ளதாக பல்வேறு தரப்பினரால் ஓழுங்கமைக்கப்பட்ட பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த்ளார்.

மேற்படி விவகாரம் தொடர்பில் இன்று (17) வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.  

ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய பங்காளிகளும் இணைந்து புதியக்  கூட்டணியை உருவாக்குவதற்கான இறுதி்த் தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது.

அந்த தீர்மானத்துக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே களமிறக்கப்படுவார்.

அதற்கமைய, தகுதியான வேட்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி  மேற்கொண்டு வருகின்றது.

ஜனநாயக சம்பிரதாயங்களை பாதுகாத்து, கட்சியின் யாப்புக்கு அமைய வேட்பாளர் தெரிவுசெய்யப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Last modified on Tuesday, 17 September 2019 15:29
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd