மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்கும் லிமினிக்கும் இடையிலான திருமணம், மிகவும் கோலாகாலமான முறையில், கடந்த 12ஆம் திகதி, தங்கல்லை கால்டன் வீட்டில் இடம்பெற்றது.
பதிவுத் திருமணம் கொழும்பில் செய்துகொள்ளப்பட்டது.
அதன்பின்னர், விருந்துபசார வைபவம் கால்டன் வீட்டில் நடத்தப்பட்டது.
திருமணம், பதிவுத் திருமணம், சமய அனுஷ்டாங்கள் யாவும் இனிதே நிறைவுற்றது. எனினும், அவ்விரு ஜோடியும் பாரிய நெருக்கடியான நிலைமைக்கு முகம் கொடுத்திருந்தனர்.
ஏனைய, பிரச்சினைகளை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, “கரண்டி” “முள்ளுக்கரண்டி” பிரச்சினையை தீர்ப்பதற்கே, அந்த ஜோடி முயன்றுக்கொண்டிருந்துள்ளது.
கால்டன் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்துக்கு 6,000 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அழைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானோர், விருந்துபசாரத்துக்கு வந்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் அமர்ந்து சாப்பிடுவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. எனினும், அவர்களுக்கு போதுமானளவு கரண்டியும், முள்ளுக்கரண்டியும் இருக்கவில்லை.
சில சாப்பாட்டு மேசைகளில் ஒரு கரண்டி கூட வைக்கப்பட்டிருக்கவில்லை என்பது தொடர்பில் நாமலின் காதுகளுக்கு ஊதப்பட்டுவிட்டது.
கடும் சினமடைந்து கன்னங்கள் சிவந்த நாமல் ராஜபக்ஷ, வாடகைக்கோ அல்லது நண்பர்களிடமிருந்தோ கரண்டி, முள்கரண்டியை பெற்றுவருமாறு ஏனைய நண்பர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
திருமண வைபவம் நிறைவுற்றது. விருந்துபசாரமும் இனிதே நிறைவுற்றது.
திருமணம் நிறைவடைந்ததன் பின்னர், கடந்த 13ஆம் திகதியிலிருந்து கரண்டிகளையும் முள்ளு கரண்டிகளையும் வகைப்படுத்தி, பிரித்துகொடுக்கும் வேலைகளில், நாமல் ராஜபக்ஷ ஜோடி ஈடுபட்டதாக அறியமுடிகின்றது.
அதுமட்டுமா?, கொழும்பிலிருந்து திருமணத்துக்குச் சென்று கொழுப்புக்குத் திரும்பிவிட்ட நாமல் ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர்களும், தங்கல்லை கால்டன் வீட்டுக்குத் திரும்பி, கரண்டிகளை வகைப்படுத்தி கொடுத்ததாக தகவல்.