அரசியல் சித்துவிளையாட்டுகள் பல இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. என்ன நடக்குமென யாருக்குமே புரிந்துகொள்ள முடியாத நிலைமையே நேற்று (19) ஏற்பட்டிருந்தது.
ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, சஜித் அணியினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
அமைச்சர்களான ராஜித மற்றும் ரவி கருணாநாயக்க மட்டுமே, ரணிலுக்கு ஆதரவாக குரல்கொடுத்தனர்.
இந்நிலையில், விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு இப்போதைக்கு அவசரமில்லையென வலியுறுத்திய சஜித் அணியினர். அந்த யோசனையை கொண்டுவந்தது யாரென மைத்திரியிடம் கேட்டனர்.
இது என்னுடைய யோசனையல்ல, உங்கள் தரப்பிலிருந்து வந்தமையால், அமைச்சரவையை நான் கூட்டினேன் என்றார்.
விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துமாறும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை கொண்டுவருமாரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே, ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியிருந்தார் என தகவல்கள் தெரிவித்திருந்தன.
எனினும், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட யோசனையை பிரதமர்தான் கொண்டுவந்தார் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறவே இல்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க, முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன குடும்பத்தினர், அண்மையில் சுற்றுலாச் சென்றுள்ளனர்.
அதில், மஹிந்தானந்த அளுத்கமகேவின் உறவினர்கள் சிலரும் இணைந்துகொண்டுள்ளனர்.
சுற்றுலாவின் போது, ஆற்றுக்குச் சென்று இளசுகள் குளித்து கும்மாலம்மிட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
ஆற்றோரத்தில் அமர்ந்திருந்து வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்த முன்னாளர் பிரதமர் தி.மு.ஜயரத்ன திடீரென ஆற்றுக்குள் குதித்துவிட்டாராம்.
பதைத்துபோன அனைவரும், கியோ முயோவென கத்தி குதரிக்கொண்டுவந்து, தி.முவை தூக்கி காப்பாற்றியுள்ளனர்.
ஆனால், எதுவுமே நடக்காதது போல, நான் திடமாகத்தான் இருக்கின்றேன். எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
என்னை கொஞ்சம் நீந்த விடுங்கள் என சிரித்துகொண்டே சொன்னாராம் தி.மு.