பிரதமர்ரணில் விக்கிரமசிங்க “ஒரு துரோகி”என நாடு முழுவதும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், கூறுவேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
அதன்போதே, “ரணில் ஒரு துரோகி” “பிரதமர் ரணில் துரோகி” என ஹக்கீம் தெரிவித்துள்ளார் என, அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம் கொடுத்ததன் பின்னர், அந்த முறைமையை ஒழிப்பது தொடர்பில் கலந்துரையாடுவோம்” என்றும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
“இந்த சந்தப்பத்தில் இவ்வாறான யோசனை கொண்டுவரப்படுவது, எதிர் வேட்பாளர்களுக்கு அஞ்சியே கொண்டுவரப்படுவதாக, மக்கள் மத்தியில் பிரசாரங்கள் கொண்டு செல்லப்படும். ஆகையால், அது தேவையில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாது, இவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கும் ஹக்கீம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.