web log free
May 09, 2025

இவ்விருவரையும் உங்களுக்குத் தெரியுமா?

மனித படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எஹலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலாபிட்டிய வீதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுத்தால் கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்களை பொலிஸ் தலைமையகம் நேற்று (22) வெளியிட்டுள்ளது.

புகைப்படங்கள் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள  அலைபேசி மற்றும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எஹலியகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071-8591402 
எஹலிய கொடை பொலிஸ் நிலையம் - 036-2258222

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd