web log free
July 01, 2025

‘கோத்தாவை கொல்லவே தடை நீக்கம்’

இலங்கையில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அவசர கால சட்டம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, முகத்தை முழுமையாக மறைத்து அணியும் ஆடைகள் மற்றும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைகவசங்களை அணிவற்கும் பாதுகாப்பு பிரிவினர் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில், அந்தத் தடை நீக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கொலைச் செய்வதற்கே, இந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்றார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd