web log free
June 26, 2026

சிறுவனை வன்கொடுமை புரிந்தவருக்கு விளக்கமறியல்


ஏழு வயது சிறுவனான பாடசாலை மாணவனை, சட்டரீதியான பெற்றோரிடமிருந்து கடத்திச் சென்று வன்கொடுமை புரிந்தார் என்றக் குற்றச்சாட்டின் கைது செய்யப்பட்ட ரஷ்ய பிரஜை, காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜீவனி பத்திரவின் உத்தரவின் பேரில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இந்த மாணவன், தன்னுடைய நண்பர்களுடன் வீட்டுக்கு முன்பாகவுள்ள வீதியோரத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்துள்ளார். இதன்போதே, அந்த சைக்கிளிலிலேயே ஏற்றிச்சென்ற ரஷ்ய பிரஜை மேற்படி குற்றத்தை புரிந்துள்ளார்.


அதன்பின்னர், அந்த சிறுவனின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் தேடிபார்த்த போது, கடற்கரையோரத்தில், அச்சிறுவன் அழுதுகொண்டிருந்துள்ளார். அதன்பின்னர், அந்த வெளிநாட்டு பிரஜையையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd