பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரை, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி இடைநிறுத்தியுள்ளது.
2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்தின் போது, எதிரணிக்குச் சென்றவர்களில் ஐவரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச, ஆனந்த அளுத்கமகே, அசோக்க பிரியந்த, எஸ்.பி.நாவின்ன, துனேஷ் கன்கந்த ஆகியோரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். எனினும், எதிரணிக்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான அத்துரலிய ரத்ன தேரர் தொடர்பில், இதுவரையிலும் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை