அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதற்கு நிபந்தனைகளுடன் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என கட்சித் தகவல்கள் தெரிவித்தன.
பிரதமர் ரணில் தலைமையில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் இன்றுமாலை இடம்பெற்ற அந்த முக்கியமான சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எட்டப்பட்டது
சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு 3 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
1. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட்டதன் பின்னர் 3 மாதங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல்
2. அதிகார பகிர்வு
3. அடுத்த அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தல்
ஆகிய மூன்று நிபந்தனைகளே விதிக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் எழுத்துமூலமாக உறுதிப்படுத்தி, இணக்கம் தெரிவிக்கவேண்டுமென சஜித் பிரேமதாஸவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கு சஜித் பிரேமதாஸ, இதுவரையிலும் இணக்கம் தெரிவிக்கவில்லை என அறியமுடிகின்றது.
சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன என அறியமுடிகின்றது.