web log free
March 03, 2026

உமா ஓயா வழக்கு ஒத்திவைப்பு


உமா ஓயா வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இந்த வழக்கு, பதுளை ஊவா மாகாண மேல் நீதிமன்றத்தில் இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேல் நீதிமன்ற நீதிபதி துசித தேசப்பிரிய குணசேகர மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


மேற்படி வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்குவதற்கு இணங்கிய நிவாரணங்களை துரிதப்படுத்துமாறு வழங்கக் கோரி, ரிட்-கட்டளையை பிறப்பிக்குமாறு, உமா ஓயா கூட்டு வேலைத்திட்டத்துக்கு எதிரான மக்கள் அமைப்மே இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd