பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரின் காய்நகர்த்தல்களினால், இருவரும் தங்களுடைய தற்போதைய பதவிகளையும் தக்கவைத்து கொண்டனர்.
அதேபோல, ஜனாதிபதித் தேர்தலில் தங்களுடைய வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றாலோ அல்லது தோல்வியடைந்தாலோ, தங்களுடைய பதவிகளை இருவரும் தக்கவைத்து கொள்வர்.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றால், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி வகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
அதேபோல, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாஸ வெற்றிப்பெற்றால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக தெரிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.
ஆனால், கோத்தாபய ராஜபக்ஷ தோல்வியடைந்தார் அவர் வீட்டுக்குச் செல்லவேண்டும். எனினும், எதிர்க்கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவிவகிப்பார்.
சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தால், மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும், எதிர்க்கட்சியின் தலைவராகவும் ரணில் விக்கிரமசிங்க பதவிவகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.