web log free
May 09, 2025

“அமைதிப்படை” விவகாரம் ஐ.நாவில் இன்று பேச்சு

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் பணியாற்றும் இலங்கை இராணுவப் பிரிவொன்றையும், குறிப்பிட்ட சில அதிகாரிகளையும் திருப்பியனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கும் விவகாரம் தொடர்பில் இன்று (27) பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமித்தமைக்காக, ஐக்கிய நாடுகள் அமைதி நடவடிக்கைத் திணைக்களமானது மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் நேற்று முன்தினம் (25) வெளியிட்டதைத் தொடர்ந்து, இலங்கை அரசு ஐ.நா. வுடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடி வருகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

74 ஆவது பொதுச் சபை அமர்வில் இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர், இந்த விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைதி நடவடிக்கைத் திணைக்களத்தின் கீழ்நிலைச்செயலாளர் நாயகத்துடன் 2019 செப்டம்பர் 27, வெள்ளிக்கிழமை கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd