முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின அணியிலிருந்தவரும் முன்னாள் அமைச்சருமான மில்ரோய் பெர்னாண்டோவும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்தவின் ஆட்சியில் அவர் அமைச்சராக பதவிவகித்தார்.
75 வயதான அவர், ஒரு தொழிலதிபர் ஆவார். பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றியீட்டி, புத்தளம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவுச் செய்யப்பட்டிருந்தார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடவுள்ளார். அதற்கான கட்டுப்பணத்தை நேற்று (27) செலுத்தியுள்ளார்.
அமைச்சராக பதவிவகித்த விபரம்.
2000–2001 சமூக சேவைகள் மற்றும் மீன்பிடி சமூக வீடமைப்பு மேம்பாட்டு அமைச்சர்.
2004–2007 கிறிஸ்தவ விவகாரங்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்.
2007–2010 பெருந்தோட்ட முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி அமைச்சர்.
2010 முதல் 2015 ஜனவரி 9 வரை மீள்குடியேற்ற அமைச்சர்.
பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட ஆண்டுகள்
9 ஆவது நாடாளுமன்றம் (1989),
10வது நாடாளுமன்றம் (1994),
11வது நாடாளுமன்றம் (2000),
12வது நாடாளுமன்றம் (2001),
13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.