web log free
May 09, 2025

தங்கச்சி துஷ்பிரயோகம், அண்ணனுக்கு கைவிலங்கு

15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட  20 வயதுடைய சகோதரன் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று சனிக்கிழமை (18) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின்  தந்தையாரின் முதல் மனைவியின் 20 வயது மகன் தந்தையாரின் இரண்டாவது மனைவியின் 15 சிறுமியான சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த இளைஞரை  வெள்ளிக்கிழமை (27) கைதுசெய்தனர் .

குறித்த  இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் முடித்து அவருடன் வாழ்ந்து வருவதாகவும் இந்த நிலையில் குறித்த சிறுமி தந்தை சிறிய தாயுடன் வாழ்ந்து வருவதாகவும் பாடசாலையில் கல்விகற்றுவரும் குறித்த சிறுமியான சகோதரியை கடந்த ஒரு மாதகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது 

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். 

Last modified on Sunday, 29 September 2019 02:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd