web log free
April 27, 2024

தாய் கொடுத்த உணவை தலையில் கொட்டியவராம் கோத்தா

நாட்டின் குடியுரிமையும் தேசிய அடையாள அட்டையும் அற்ற கோத்தபாய ராஜபக்சவை நாட்டின் தலைவராக நியமிக்க இடமளிக்கக் கூடாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.

கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றும் போது குடியுரிமை மற்றும் குடியகல்வு திணைக்களத்தையும் ஆட்பதிவு திணைக்களத்தையும் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.

அச்சந்தர்ப்பத்தில் அவர் பாதுகாப்பச் செயலாளராக கடமை புரியவில்லை. பாதுகாப்பு அமைச்சராகவே கடமையாற்றினார். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கோத்தபாய ராஜபக்ச போலியான கடவுச் சீட்டினையும் அடையாள அட்டையினையும் பெற்றுக் கொண்டுள்ளார் என இங்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன விமர்சித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜி,

 

 

 

கோத்தபாய ராஜபக்ச என்பவர் தனக்குத் தானே கூறிக்கொள்கின்றார் ராஜபக்ச குடும்பத்தில் உள்ள அப்பாவியான நபர் தானே என்று. அவருடைய அப்பாவித்தனத்தை கமல் குணரத்ன எழுதிய புத்தகத்தில் காணக்கூடியதாக இருந்தது.

சிறுவயதில், ஒரு தருணத்தில் தனது அம்மா தனக்கு சாப்பாட்டை கொடுத்த போது அதில் ஏதோ குறை இருந்ததால் அந்த சாப்பாட்டை தனது தலையிலேயே கொட்டிக்கொண்டாராம்.

தான் வீட்டில் இருக்கும்போது ஒருவர் வந்து தம்மை தாக்கி சென்ற நேரத்தில் தாம் ஆடையில்லாமல் இருப்பதை கூட மறந்து நெடுந்தூரம் சென்று அந்த நபரை தாக்கியதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் அவரது அப்பாவித்தனம்.

கோத்தா “பய” அதன் அர்த்தம், சிறுவயதிலேயே சிறந்த பெயரையே அவரது பெற்றோர் அவருக்கு இட்டுள்ளனர். அவரது பெயரைக் கண்டால் பயம் என்பதைப் போல இருக்கின்றது.

1991 இராணுவத்தில் இருந்து விலகி பயந்து ஓடிய கோத்தபாய இன்று தாம் சிறந்த இராணுவ வீரர் என கூறிக்கொள்கின்றார். நாட்டை காக்கும் யுத்தத்தின் போது உயிர் தப்பிக்கொள்வதற்காகவே அவர் இராணுவத்தில் இருந்து வெளியேறினார்.

அவ்வாறு தப்பியோடிய இவர் எப்படி சிறந்த இராணுவ வீரராவார். நினைத்தாலே சிரிப்பாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Sunday, 29 September 2019 17:10