மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று (22) நடைபெறும் சபையமர்வில் முன்வைக்கப்படும் என மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சு ஸ்ரீ அரங்கல தெரிவித்தார்.
நிதி குற்றச்சாட்டு உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. அவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவரை, மேல் மாகாணத்துக்கு ஆளுநராக நியமித்தமை, மாகாணத்துக்கே அகௌரவமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.