கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் ஊடாக, அவரின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டிக்கு எவ்விதமான தடையும் இல்லையெனவும் அவ்வாறு செய்வதற்கு சட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லையென்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான அறிவுறுத்தல்கள், கட்டளைகள் மற்றும் உத்தரவுகளை உயர்நீதிமன்றத்தினால் மட்டுமே செய்யமுயும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷவை வேட்பாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆகையால், வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் மட்டுமே, எதிர்ப்பை தெரிவிக்கமுடியும் என்றார்.
ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவினால், வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், தேர்தல் மனுவை தாக்கல் செய்யமுடியும் என்றும் சரத் என். சில்வா மேலும் தெரிவித்துள்ளார்
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் ஊடாக, கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையிலான உத்தரவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது என்றார்.