ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடைலான புதியக் கூட்டணி தொடர்பில் எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.
கோத்தாவுக்கு வாக்களிக்க முடியும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாமரை மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
பொதுசின்னமொன்றில் களமிறங்கினால், சுதந்திரக் கட்சியும் இணைந்து கொள்ளுமென பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தாமரை மொட்டு சின்னத்தை எக்காரணத்துக்காகவும் கைவிடமுடியாது என, முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்தக் கட்ட நடவடிககை தொடர்பில் ஆராய்வதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டம், ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
அதன்போது, தாமரை மொட்ட சின்னம் தொடர்பில் ஆராய்வதற்கு காலந்தாழ்த்துமாறு மத்தியக் குழு, நேற்றிரவு தீர்மானித்தது.
கோத்தாவுக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், எதிர்வரும் 5 ஆம் திகதி கூடவிருக்கும் மத்தியக் குழுக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
கோத்தாவுக்கு ஆதரவளிப்பதில் பிரச்சினையில்லை எனினும், தாமரை மொட்டுவுக்கு ஆதரவளிப்பதில் பிரச்சினைகள் உள்ளன என, மத்தியக் குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் சுமார் மூன்றரை மணிநேரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.