web log free
May 05, 2024

ராஜபக்ஷர்களை எதிர்த்தார் ராஜபக்ஷ-தினேஸுக்கு வாய்ப்பு

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஏதேனும் சட்டரீதியான தடைகள் ஏற்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவிருக்கும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராயப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும், பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் நேற்று (30) மாலை முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

கோத்தாவுக்கு அவ்வாறான சட்டசிக்கல் ஏற்படுமாயின், அடுத்ததாக சமல் ராஜபக்ஷ அல்லது ஷிரந்தி ராஜபக்ஷவை களமிறக்குவது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அவ்விரண்டு யோசனைகளையும் மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துவிட்டார் என அறியமுடிகின்றது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் எதிர்கட்சித் தலைவருக்கும் கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான சிக்கல் ஏற்படுமாயின், ஜனாதிபதி வேட்பாளராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று (30) கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும்,மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காத்திருப்பதாக அறியமுடிகின்றது.

 நாளை 2 ஆம்திகதி, 3ஆம் திகதி மற்றும் நான்காம் திகதிகளில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது தரப்பு வாதங்களை முன்வைக்கும் சட்ட ஏற்பாடுகளை பெரமுன முன்னெடுத்துவருவதாக அறியமுடிகின்றது. 

Last modified on Tuesday, 01 October 2019 03:34