ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில், சட்டமா அதிபர் தன்னுடைய நிலைப்பாட்டை ஒக்டோபர் 3ஆம் திகதி அறிவிக்கவுள்ளார்.
சிங்கபூருக்கு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12 ஆம திகதி வரையிலும் மருத்துவ சிகிச்கைக்காக செல்லவேண்டும் எனக் கோரியே, கடவுச்சீட்டை விடுவிக்குமாறு, நிலையான மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசேட மேல் நீதிமன்றத்திடம் கோத்தாபய ராஜபக்ஷ இன்று (01) கோரியிருந்தார்.
வீரக்கெட்டிய மெதமுல டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுதூபியை நிர்மாணிப்பதற்கு, காணியை பெற்று, அபிவிருத்தி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் போது, 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது எதிராக தாக்கல் வழக்கு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நகர்வு மனுவின் ஊடாக, பிரதிவாதி தரப்பினரால் இன்று (01) அழைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான, சம்பத் விஜேரத்ன (தலைவர்) சம்பத் அபேகோன் மற்றும் சம்பா ஜனாகி ராஜரத்னம் ஆகியோர் முன்னிலையிலேயே இவ்வழக்கு அழைக்கப்பட்டது.