தாமரை மொட்டை கைவிட்டுவிட்டு, பொதுச் சின்னத்தில் போட்டியிட்டால் என்ன நடக்கும் என்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு கோத்தாபய ராஜபக்ஷவின் பெயரிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷ, பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் நபர் இல்லை. என்பதனால், கட்சியில் போட்டியிடுவது கட்டாயமாகும்.
வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் போது, பிரிதொரு கட்சியின் பெயரில் வேட்புமனுவை தாக்கல் செய்தால், நீதிமன்றத்தின் ஊடாக அதனை நிராகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
தாமரை மொட்டு சின்னத்தை கைவிட்டுவிட்டு, பொதுச் சின்னமொன்றில் களமிறங்கினால் மட்டுமே ஒத்துழைப்பு நல்குவோம் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.