ராஜபக்ஷர்களின் கூட்டுக்குள் குழப்பகரமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ராஜபக்ஷர்களுக்கு இடையிலும் பங்காளி கட்சிகளுக்கு இடையிலும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், சமல் ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்திவிட்டார்.
இது ஆளும் கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்கு, எதிர் பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுமென அறியமுடிகின்றது.
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படுமாயின், அவ்வணி போட்டியிடமுடியாமல் போகும்.
அதன் ஒரு அங்கமாகவே, சமல் ராஜபக்ஷவை களமிறக்கி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதற்கு ஆதரவளிக்கும் வகையில் திட்டங்களை வகுத்து, சமல் ராஜபக்ஷவின் சார்பில் கட்டுப்பணமும் செலு்தப்பட்டது.
இந்நிலையில், கோத்தாவுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டமையால், ராஜபக்ஷர்களுக்கு இடையிலேயே போட்டி நிலவுவதாக அறியமுடிகின்றது.
இரண்டு ராஜபக்ஷர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என்றும், சமல் ராஜபக்ஷ தன்னுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வார் என்றும் அறியமுடிகின்றது.
கோத்தாபய ராஜபக்ஷவின் வேட்பு மனுக்கு எவ்விதமான சவாலும் விடுக்கப்படாமல், நிராகரிக்கப்படாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டால்,
எதிர்வரும் திங்கட்கிழமையன்று சமல் ராஜபக்ஷ வேட்பு மனுவை தாக்கல் செய்யமாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.