கோத்தாவுக்கு போட்டியிட முடியாமல் போய்விட்டால், ஒரு பெக்கப் பிளேனுக்காகவே, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் பெயரின் சார்பில், கட்டுப்பணம் செலுத்தப்பட்டது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கோத்தாவுக்கு எதிரான தீர்ப்பின் பின்னரே, விமல் வீரவன்ச தன்வாயாலே அதனை ஏற்றுக்கொண்டார்.
“அதற்கு பிரச்சினை பட்டுக்கொள்ளத் தேவையில்லை. அது ஒரு பெக்கப் பிளேன்” என்றார் விமல்.
சமல் ராஜபக்ஷ, நாளை திங்கட்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு சமூகமளிக்கமாட்டார். அவர், அமைதியை கடைப்பிடிப்பார் என அறியமுடிகிறது. எனினும், அதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களும் இதுவரையிலும் வெளிவரவில்லை.