ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்த்து போராடமல், ஜனாதிபதியாவதற்கு எவ்விதமான தேவையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால்தான் எங்களுக்கு திருப்தி, அதுவே எங்களுடைய விருப்பமாகும்.
கோத்தா பயம் எங்களித்தில் இல்லை.
“கோவணத்தால் நாங்கள் முகங்களை மூடிக்கொள்ளவில்லை“ என்றார்.
“கேமுக்கு தேவையான நேரம் இறங்குவோம்“ என்றார்
பயிற்சி ஓட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, அதிலிருந்து தாவிக்குதித்து சம்பியன் என்று சொல்லமாட்டோம்.
இறுதிப்போட்டி இடம்பெறும் நாளன்றே, நாங்கள் ஓடுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்றார்.
ஆகையால், எக்காரணத்துக்காகவும், கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி வழக்குத் தாக்கல் செய்யாது. அவ்வாறான திட்டங்கள் எவற்றையும் ஐக்கிய தேசியக் கட்சி வகுக்கவும் இல்லை என்றார்.