ஆம், தாமரை மொட்டில் ஜனாதிபதி வேட் பாளராக போட்டியிடவிருக்கும் கோத்தபாய ராஜபக்வின் குடியுரிமை தொடர்பில் எழுந் துள்ள சட்டப்பிரச்சினைகள் தாமரை மொட் டுக்குத் தள்ளாட்டத்தைக் கொடுத்துள்ளது.
குடியுரிமை தொடர்பான விசாரணைகள் கோத்தபாயவுக்குச் சாதகமாக அமைந்தால், தாமரை மொட்டும் தப்பித்துக் கொள்ளும்.
இல்லையேல் புதியவர் ஒருவரைக் களமிறக்கும் கட்டாய சூழ்நிலை ஏற்படும்.
ஆக, ஒரு குளம். அதில் அன்னமும் தாமரை யும். முதலில் அன்னத்துக்கு ஈடாட்டம். அது தணிந்து அன்னம் நீந்தத் தொடங்க, தாமரை மொட்டுக்குத் தள்ளாட்டம்.
தள்ளாட்டம் நின்று தாமரை மொட்டு கோத்தபாயவுடன் பயணிக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
உலகில் அண்மைக்காலத்தில் அழிந்து போன உயிர்வகையில் அன்னப்பட்சியும் அடங்கும்.
அன்னப் பட்சி குளங்களில், நீர் நிலைகளில் நீந்தித் திரிந்து மகிழ்வடையும்.
அதிலும் தாமரைக்குளங்களில், தாமரைத் தடாகங்களில் நீந்துவதில் அன்னப்பட்சிக்கு விருப்பம் அதிகம்.
அதனால்தான் வெண்டாமரையில் வீற்றி ருக்கும் சரஸ்வதிதேவியின் உருவப்படத்தில் அன்னப்பட்சி, தாமரை மொட்டு என்பவற்றைச் சித்திரிக்கின்ற வழமை உண்டு.
இவை அன்னம், தாமரைமொட்டு என்பவற் றுக்கும் நீர்த் தடாகங்களுக்கும் இடையிலான தொடர்பினைக் கூறுவதற்கானது.
எனினும் அன்னம் தாமரை மொட்டைத் தீண்டியதில்லை. தாமரை மொட்டும் அன்னத் தைப் பகைத்துக் கொண்டதுமில்லை.
ஆனால் இலங்கையில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம், தாமரை மொட்டு ஆகிய இரண்டு சின்னங்களும் கடும் போட்டியில் களமிறங்கியுள்ளன.
இதில் அன்னம் சின்னத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் தாமரைமொட்டுச் சின் னத்தில் கோத்தபாய ராஜபக்வும் போட்டியிட வுள்ளனர்.