இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதித் தேர்தலாக அமையக்கூடுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடாவிட்டால். அது வரலாற்றில் இடம்பிடிக்கும் தேர்தலாகும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் களத்தில் குதிக்காத தேர்தலாக அமையும் என்றார்.
இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 பேர் கட்டுப்ணம் செலுத்தியுள்ளனர்.
அதில், தமிழ், முஸ்லிம்கள் ஆறுபேரும் கட்டுபணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுகாலை 9 மணிமுதல் 11 மணிவரையிலும் நடைபெறும்.
எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
அதன்பின்னர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.