நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 11 மணியுடன் நிறைவடையும்
இதில், நாமல் ராஜபக்ஷவும் போட்டியிடவுள்ளார்.
சட்டத்தரணியான இவர், மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் அல்லர்.
சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷவும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலேயே ஆகக் கூடுதலாக 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டார்.
அவர்ஈ 15,726 வாக்குகளைப் பெற்று அந்த முறை நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
அவருடைய பெயருடன் ராஜபக்ஷவின் பெயரும் இருப்பதனால், தேர்தலில் பலர் அவருக்கு வாக்களித்துவிட்டனர் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
2015 ஜனாதிபதித் தேர்தலில் 18,174 வாக்குகளைப் பெற்று 3 ஆவது இடத்தை பிடித்துக்கொண்டவர்கள் ஆராச்சி ரத்னாயக்க சிறிசேன என்பவராவார்.
அவர், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு டம்மியாக நிறுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.