ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணத்தொகை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என அறியமுடிகின்றது.
தேர்தலுக்கான மொத்த செலவில் 10 சதவீதம் அல்லது 50 இலட்சம் ரூபாவை கட்டுப்பணம் அறவிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடிவருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகாரிப்பதனால் செலவுகள் அதிகரிக்கின்றன. பொதுமக்கள் மீதான சுமையும் அதிகரிக்கிறது.
ஆகையால், கட்டுப்பணத் தொகையை அதிகரிப்பதற்கு கலந்துரையாடப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.