web log free
May 11, 2025

பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேர் தொடர்ந்து விளக்கமறியலில்

ருகுணு பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ருகுணு பல்கலைக்கழக பிரதான மாணவர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட 19 மாணவர்கள் மீண்டும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இதற்கு அமைவாக புதிய பகிடிவதை சட்டத்தின் கீழ் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய மாணவர் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் இன்றை தினம் மாத்தறை பிரதான நீதவான இசுறுநெத்தி குமார முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.


ருகுணு பல்கலைக்கழக புதிய மாணவரை மாத்தறை மெதவத்தையில் உள்ள விடுதியில் வைத்து பகிடிவதை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இந்த 19 மாணவர்களும் மாத்தறை தலைமை பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd